அன்பு நண்பர்களே, என் வாழ்வில் எத்தனையோ நபர்களை சந்தித்தாலும் தங்களது வித்தியாசமான குணாதிசயங்களால் என்னை கவர்ந்தவர்களைப்பற்றி நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்...
சமீபத்தில் அப்படி ஒரு ஆத்மாவை சந்திக்க நேர்ந்தது...கோவையில் உள்ள பாப்பனாயக்கன்பாளயத்தில் ஒரு சிற்றுண்டி உணவகம் (சத்தியாமெஸ்) நடத்திவரும் பாலு சார் என்கிற திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள்...
அவரது உணவகம் சிறிது வித்தியாசமானது ....சோளம், ராகி, கம்பு, போன்ற பாடப்புத்தகங்களில் மட்டுமே நமது குழந்தைகள் படித்தறிந்த தானியங்களில் செய்த சுவை மிகுந்த சிற்றுண்டிகளுக்காகவே கூட்டம் மிகுந்து வரும் வாடிக்கையாளர்களை கொண்டது....
அவரது உணவகத்தில் சில வித்தியாசமான படங்களை வரைந்து வைத்திருக்கிறார்...அதிலும் கடைசி படத்தில் ஒரு கேள்விக்குறியோடு முடித்திருக்கிறார்....
அது பற்றி அவரிடமே கேட்டபோது அவர் சொன்ன தகவல்கள் வியப்பைத்தந்தது...
"ஒரு காலத்தில் வழிப்போக்கர்களுக்காக அன்னச்சத்திரம், சாவடிகளை கட்டி வைத்திருப்பார்கள்...அதில் அன்போடு உபசரித்து தரையில் அமர்த்தி உணவு பரிமாறுவார்கள்..."
" அடுத்த காலகட்டத்தில் வாகனங்களில் வரும் பிரயாணிகளுக்காக மேசை நாற்காலிகளுடன் கூடிய உணவகங்கள் தோன்றின...அடுத்த காலகட்டத்தில் ரெஸ்டாரண்டுகள் தோன்றின...அடுத்து பப்பே எனப்படும் நாம் நின்றபடியே...நடந்தபடியே...சாப்பிடும் கலாச்சாரம்..."
கடைசிபடம் தான் சூப்பர்...ஆளுக்கொரு மாத்திரையை போட்டுகொண்டு முழுங்கி விட்டு செல்லும் காலமும் வருமோ என்று கேள்விக்குறியோடு முடித்திருக்கிறார்...
அவர் வருத்தத்துடன் சொன்ன விஷயம் தான் ஹைலைட்டு...சார் உலகிலேயே நமதுநாடு சர்க்காரை வியாதியில் முதலிடத்தில் உள்ளது...ஏன் என்றால் எப்போதும் அரிசி மாவு இட்லி, தோசை, அரிசி சாப்பாடு, மைதா மாவு புரோட்டா, மைதா மாவு பீசா என்று தின்று உடல் உழைப்பு சிறிதும் இல்லாமல் இந்த நிலை....இது மாறவேண்டும் என்றால் சிறு தானியங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்....அவற்றில் சுவை இருக்காது என்று நம் பெண்கள் முடிவு கட்டி விட்டதால் அவர்களுக்கு உணர்த்தவேன்டியே எங்கள் உணவகத்தில் கம்பு தோசை, ராகி தோசை, சோள தோசை முதல் எல்லா வித்தியாசமான அயிட்டங்களாக வழங்க ஆரம்பித்தோம்... மக்கள் பெரும் அளவில் எங்களை ஆதரிப்பதோடல்லாமல் அவர்கள் வீட்டிலும் இவற்றை சமைக்க ஆரம்பித்து இன்று நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழ்வது எனக்கு மிகுந்த மன நிறைவினை தருகிறது என்கிறார்....
எத்தனையோ பேர் பணம் சம்பாதிக்க மட்டும் தொழில் செய்கிறார்கள்....சிலர் மனம் சம்பாதிக்கவும் தொழில் செய்கிறார்கள்....வாழ்க....







நல்ல பதிவு. அவருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் குரு ஸார்.
ReplyDeleteமுதல் பதிவே சுவை...எப்ப கூட்டிட்டு போறீங்க அங்கே?
ReplyDeleteVery nice post. Thanks for bringing this mess to light, and also pointing out the problems of thoughtless eating.
ReplyDeleteWhere is this mess I want to try.
ReplyDeleteShobha... it is at Pappanaickenpalayam, Coimbatore.You can note the cell phone number displayed on the board of the hotel.The photo is there.
ReplyDeleteஅன்புள்ள குருஜி,
ReplyDeleteஉண்மையாகவே இது ஒரு ஆபத்தான கட்டம் தான். அநேகமாக எல்லோருமே இதில் பங்கு கொண்டுள்ளோம்.
கம்பும் கேழ்வரகும் தரம் குறைந்த உணவு என்ற மனோபாவம் வளர்ந்துள்ளதாலேயே இந்த நிலை வந்துள்ளது.
அனால் இந்த நிலை மாறி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. ஒவ்வொரு வீட்டிலும் இந்த மாற்றம்
ஏற்பட்டால் அன்று இந்த சமுதாயமே ஆரோக்யமானதாய் மாறி விடும் என்பதில் ஐயமில்லை. சத்யா மெஸ்சுக்கு
என் வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றித் தோழரே! சத்தான பதிவு!
ReplyDeletehttp://atchaya-krishnalaya.blogspot.com
இதெல்லாம் நாம சொன்னா கேட்கமாட்டாங்க
ReplyDeleteஏதாவது கார்பரேட் கம்பெனிக்காரன் டிவியில் மணிக்கு பத்துதடவை மார்க்கட்டிங் பண்ண விளம்பரம் செய்வான் பல வருடம் கழித்து அப்போ போட்டி போட்டுகொண்டு வாங்கி சாப்பிடுவார்கள் பல மடங்கு விலை கொடுத்து
IT IS GOOD DESISSION FOR A GOOD PEOPLE. PLEASE REFER THE ALL THE PEOPLE. .IT (RAGGI , KAMBU , CHOLAM.) IS GOOD FOR AN HUMAN HEALTH...........
ReplyDelete